கே.ராஜேஷ்வரின் மகன் அறிமுகமாகும் "திடீர் நகரில் ஒரு காதல் கானா"

Sunday, November 14, 2010


'அமரன்', 'அதே மனிதன்', 'துறைமுகம்', 'கோவில்பட்டி வீரலட்சுமி', 'கலைஞரின் நியாயத்தராசு', 'இதயத்தாமரை' உட்பட பல படங்களை இயக்கியிருக்கும் கே.ராஜேஷ்வர் தம், மகனை ஹீரோவாக வைத்து "திடீர் நகரில் ஒரு காதல் கானா" என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தியில் பல கோடிகளை வசூல் செய்து சாதனைப் படைத்த 'அசப் பிரெம்ஜி கசப்கஹானி' படத்தின் ரீமேக்தான் இப்படம். கே.ராஜேஷ்வர் எழுதிய இந்த கதையை, பிரபல இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இந்தியில் இயக்கினார். தமிழில் கே.ராஜேஷ்வர் தம் மகன் ரஞ்சனை ஹீரோவாக வைத்து இப்படத்தை இயக்குகிறார். இதற்காக சண்டை, நடனம், நடிப்பு என கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டப் பிறகே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முன்வந்தாராம் ரஞ்சன். இவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த முன்னணி மாடல் அழகி ஒருவர் நடிக்க இருக்கிறார். மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆதித்யான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஜி.பி.கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ரகுபாப் படத்தொகுப்பு செய்கிறார். கலை பிரபாகர், தயாரிப்பு மேற்பார்வை ஏ.கே.சேகர், மக்கள் தொடர்பு விஜயமுரளி.

ஐகான் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் பிலிம் மேஜிக் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று (நவம்பர் 12) சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன், பாலுமகேந்திரா மற்றும் பல ஏராளமான திரைபிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த துவக்க விழாவின் போது ராஜன்பிள்ளையின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து டாக்டர் ஜே.ராஜ்மோகன் பிள்ளை, கே.கோவிந்தன் குட்டி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியுள்ள "நீதியின் கொலை" என்ற புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP