தமிழ்மணத்தின் பாரபட்சம் - நன்றி

Monday, October 20, 2008

தமிழ்மணத்தின் பாரபட்சம் தொடர்கதையாகி வருகிறது. மூத்த பதிவர்கள் என்ன எழுதினாலும் எந்தப்படம் போட்டாலும் ஏற்றுக்கொள்ளும் களமாகவே தமிழ்மணம் இருந்து வருகிறது. பெயரை குறிப்பிடாமல் ஒரு பதிவரை சொல்கிறேன். அவர் தனது பதிவின் தலைப்பிலேயே ரொம்ப வெட்க படாதீங்க சார் என்று குறிப்பிட்டு ஒரு கவர்ச்சிகரமான படத்தை போடுகிறார். இதே போல மூத்த பதிவர் காமக்கதை என்று போட்டு எழுதுகிறார். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே தமிழ்மணத்தில் இன்னமும் இடம் இருக்கிறது. இதற்கு பதிலடியாக தான் தமிழ்சினிமா பதிவில் இப்படி படங்களுடன் ஒரு அதிரடி ஆட்டம் ஆடப்பட்டது. பரவாயில்லை தமிழ்மணம் நிர்வாகிகள் நன்றாகவே கேட்ச் பிடிக்கிறார்கள். எங்களை வெளியேற்றி விட்டோமே என்று கர்வப்பட்டு கொள்ளாதீர்கள்... தமிழ்மணத்தில் இன்னமும் தப்பாட்டம் ஆட நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது நாள் வரையில் எங்களுக்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கு நன்றி.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP