Drogam Nadanthathu Enna Movie Hot Actress Stills, Photos, Pics

Wednesday, March 3, 2010

Drogam Nadanthathu Enna Movie Hot Actress Stills, Photos, Pics
Tags : actress, Drogam Nadanthathu Enna, Hot, Movie, Photos, Pics, Stills






Read more...

சிங்கத்துக்கு அடுத்து அருவா... ஹரியின் அடுத்தபடம்

Tuesday, February 23, 2010

இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதில் ஹீரோ தனுஷாம்!



இப்போது சூர்யாவை வைத்து சிங்கம் என்ற ஆக்ஷன் படம் எடுத்து வருகிறார் ஹரி. இந்தப் படம் முடிந்ததும் விஜயா கம்பைன்ஸுக்காக ஒரு படம் இயக்குவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டப்பட்டுள்ளதாம்.

அதன்படி அந்தப் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையான இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

தனது எல்லா படங்களிலும் அருவாளை ஒரு செட் ப்ராபர்ட்டியாகவே மாற்றிவிட்ட ஹரி, இந்தப் படத்துக்கு அருவா என்றே பெயரிட்டிருக்கிறார். கதையும் வழக்கம் போல திருநெல்வேலி ஏரியாவில்தான் என்பது சொல்லாமலே தெரியும் செய்தி.

தனுஷ் இப்போது ஆடுகளம் மற்றும் மாப்பிள்ளை படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடுகளம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மாப்பிள்ளை முடியும் சமயத்தில் அருவா படத்தை ஆரம்பிப்பார்களாம்.

அருவா படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

Read more...

பாம்புகள் என் செல்லப்பிராணி - நடிகை மோனிகா

பாம்பு என்றாலே படை நடுங்கும். தொடை நடுங்கும் என்றெல்லாம் அச்சப்பட்டாலும், சினிமாவை பொறுத்தவரை பாம்பு சென்ட்டிமென்ட் பணக்கார சென்ட்டிமென்ட். அதாவது பாம்பை வைத்து படமெடுத்தால் அது ஹிட்!

இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நு£ற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். "பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம்" என்றார் இயக்குனர் சார்லஸ்.



முதலில் மிஸ்டர் பாம்பு ராசாவை கண்டு பயந்த படத்தின் நாயகி மோனிகா, படம் முடியும்போது இப்படி செல்லமா பழகிய பாம்பை விட்டு பிரியுறமே என்று கவலைப்படுகிற அளவுக்கு திக் பிரண்டாகிவிட்டாராம் அவைகளிடம். "வீட்ல பெட் அனிமலா கூட வளர்க்கலாம். அந்தளவுக்கு பாம்புங்க ரொம்ப நல்ல பசங்க" என்று சிபாரிசு பண்ணுகிற அளவுக்கு தைரியமாகி விட்டார் மோனிகா.

படத்தின் ஹீரோ ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தவர் இவர். அதன்பின் இந்த படத்தில் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கோம் என்றார். வில்லேஜ் கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம்.

"பாம்புகளை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடம் நிறைய இருக்கு. அதையெல்லாம் தெளிவு படுத்துற படமாகவும் இது இருக்கும்" என்கிறார் சார்லஸ். படமெடுக்கிற பாம்பை வைச்சு படமெடுக்கிறாங்க. வசூலை வச்சு நாலைஞ்சு படம் எடுக்கிற அளவுக்கு நாகராஜா ஆசிர்வதிக்கப்பட்டும்...


readmore...

Read more...

மாத்தியோசி ரீலிசுக்காக காத்திருக்கும் ஷம்மு

Tuesday, November 24, 2009


மாத்தியோசி படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன். வேறு படங்களில் கமிட் ஆகவில்லை என்று நடிகை ஷம்மு கூறினார். நடிகை ஷம்முவுக்கு அஜித் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி ஷம்முவிடம் கேட்டால், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. நான் இப்போதைக்கு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மாத்தியோசி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என நம்புகிறேன். எனவே அப்படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன், என்றார். அம்மணி ஷம்மு ஓய்வுக்காக பிறந்த நாடான அ‌மெரிக்காவுக்கு செல்கிறாராம். ஓய்வுக்கு பிறகு ஜனவரி மாதத்தில்தான் மீண்டும் சென்னை வருவாராம்

Read more...

உடல் எடையை குறைக்க பிக்பிரதர் நடிகையின் டிரிக்

Wednesday, September 9, 2009

உடல் எடையைக் குறைக்க சாப்பாட்டைக் குறைப்பார்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாரத்தான் செக்ஸ் வைத்துக் கொண்டு தனது எடையைக் குறைக்கப் போவதாக கிளுகிளுப்பாக கூறியிருக்கிறார் பிரிட்டன் டிவியில் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றுள்ள ஷோபி ரீட்.

20 வயதேயாகும் இளம் கிளாமர் புயல்தான் ஷோபி. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். ஷில்பா ஷெட்டி வென்ற அதே பிக் பிரதர் நிகழ்ச்சிதான்.

பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு நிறைய சாப்பிட்டதால் குண்டக்க மண்டக்க எடை கூடி விட்டாராம் ஷோபி. ஆனால் இதைக் குறைக்க தன்னிடம் வழி உள்ளதாக கூறுகிறார் ஷோபி.

ஷோபி கூறும் அந்த வழி படு வித்தியாசமானது - கிளுகிளுப்பானது. தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைக்கப் போகிறாராம் ஷோபி.

ஷோபி கூறுகையில், தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தாறுமாறாக சாப்பிட்டு பெருத்துப் போய் விட்டேன். தற்போது நான் சைஸ் 10 க்கு போய் விட்டேன்.

நிறைய சாப்பிட்டேன். ஆனால் வேறு வழியில்லையே. இருந்தாலும் உடலைக் குறைக்க என்னிடம் எளிதான ஒரு வழி உள்ளது.

நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ளப் போகிறேன். அதற்குப் பிறகு பாருங்கள், தானாக உடல் குறைந்து போய் விடும் என்கிறார் படு கூலாக.

ஆனால் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவருடன் பங்கேற்ற காதலர் கிறிஸ் டோன்னலியுடன் கண்டிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டாராம்.

ஏனாம்..

அவன் அதற்கேற்ற ஆள் இல்லை. ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான்...என்னோட சிஹுஹுவா நாய்க்குட்டி கூட கொஞ்சம் பெரிதாக இருக்கிறது... ஆனால்...(இதற்கு மேல் அவர் சொன்னதை எழுத முடியாத அளவுக்கு அது ஆ...)

பிரேசில் நாட்டைச் சேர்ந்த எனது நண்பன் ரோட்ரிகோ லோபஸைத்தான் செக்ஸர்சைஸுக்கு நான் தேர்வு செய்து வைத்துள்ளேன். எனது உடல் எடையைக் குறைக்க லோபஸ் பெரும் உதவியாக இருப்பார்.

எல்லோருக்கும் தப்பாக தெரிவது எனக்கு மட்டும் சரியாகவே தோன்றும். எப்பவுமே நான் அப்படித்தான் என்கிறார் ஷோபி.

Read more...

ஆடிப் போய்விட்டேன்... பிரகாஷ்ராஜ் பெருமிதம்

2007 ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக தமிழில் வெளியான காஞ்சிவரம் தேர்வு செய்யப்பட்டது. பிரகாஷ்ராஜ், ஷம்மு ஆகியோர் நடித்த இந்த படம் நெசவாளர்களின் வறுமையை மையமாக கொண்டது. இதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான போட்டியில் சக்தே இந்தியா படத்திற்காக ஷாருக்கானும் இருந்தாராம். ஆனாலும், இந்த போட்டியில் பிரகாஷ்ராஜே வெற்றி பெற்றுள்ளார். சிறந்த மாநில மொழி படமாக ஞான ராஜசேகரன் இயக்கிய பெரியார் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் விருதை ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் பெற்ற அடூர் கோபால கிருஷ்ணன் பெறுகிறார். இவர் இயக்கிய நாலு பெண்கள் படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

தனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது-

மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததை விட தமிழ் படத்திற்கு கிடைத்திருப்பது இன்னும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. டைரக்டர் பிரியதர்ஷனுக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தி படவுலகில் பிஸியாக இருந்த நேரத்தில் ஒருநாள் என்னை சந்தித்தார். நான் ஒரு தமிழ் படம் எடுக்கப் போகிறேன். அது நல்ல கதை. அந்த கதைக்கு நீதான் பொறுத்தமாக இருப்பாய். நீ சம்மத்தித்தால் உடனே அந்த படத்தை எடுப்பேன். இல்லையென்றால் அந்த திட்டத்தை தள்ளி போட்டு விடுவேன் என்றார்.

பிறகு அந்த கதையை என்னிடம் சொன்னார். நான் ஆடிப் போய்விட்டேன். பிரியதர்ஷன் என் மீது வைத்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு உட்பட படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். தேசிய விருது கமிட்டிக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த விருது எனக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது. ஒரு நடிகர் முயற்சி செய்தால் விருது கிடைக்காது. நல்ல கதையும் இயக்குனரும் அமையும்போதுதான் விருது கிடைக்கிறது. எனவே நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

Source : http://tamilcinema.com

Read more...

நடிகை ஜெனிலியாவை தொட்ட ரசிகர்களுக்கு போலீசின் லத்தி அடி

Thursday, June 11, 2009

சூட்டிங்கிற்காக கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை ஜெனிலியாவை தொட்ட ரசிகர்களுக்கு போலீசின் லத்தி அடி விழுந்தது. தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால் இந்தி சினிமா பக்கம் போயிருக்கிறார் நடிகை ஜெனிலியா டிசாசோ. ஷாகித் கபூருடன் அவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான சூட்டிங் மற்றும் போட்டோ ஷூட் மும்பையின் பந்த்ரா பகுதியில் நடைபெற்றது. நடிகைகள் சாதாரண உடையில் வந்தாலே ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். அம்மணி வேறு கவர்ச்சியான உடையணிந்து சூட்டிங்கிற்கு வந்திருந்தார். விடுவார்களா நம் மக்கள்? ஜெனிலியாவை பக்கத்தில் நின்று பார்த்து விட வேண்டும் என்று முண்டியடித்தனர். ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் ரசிகர்கள் ஜெனிலியாவை நெருங்கி விட்டனர். சில ரசிகர்கள் எப்படியாவது ‌ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரை நெருங்கினார்கள். சிலர் ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அதற்குள் போலீசார் அங்கு வந்து அவர்களை தடியடி கொடுத்து விரட்டினார்கள். இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பும் நிலவியது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP